சமையல் எரிவாயுக்கான விலை அதிரடி குறைப்பு!! மகிச்சியில் இல்லத்தரசிகள்!! - Seithipunal
Seithipunal


கடந்த 2013 ஆம் ஆண்டு வரை சமையல் எரிவாயுக்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்து வந்த நிலையில். 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமையல் எரிவாயுக்கான விலையை அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்ய உரிமை வழங்குவதாக அறிவித்தது.

இதனை தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்யப்படுவதுபோல 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை என்று மாறி மாறி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 2014 ஆம் ஆண்டு 460 ருபாய் செலுத்தி சமையல் எரிவாயு பெற்ற மக்கள் திடீரென ரூபாய் 600 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து விலையேற்றம் காணப்பட்டதால் மானியமில்லா சிலிண்டர் விலை மக்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக 15 நாட்களுக்கு ஒரு முறையை விலை நிர்ணயம் செய்யும் முடிவை கைவிட்டு, மாதம் ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய இந்தியன் ஆயில் உட்பட சில நிறுவனங்கள் கையில் எடுத்தது.

இந்தநிலையில், மானியமில்லா சிலிண்டர் விலையை குறைத்து இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது இந்த விலை குறைப்பு சென்னைக்கு மட்டுமே பொருந்தும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரூபாய் 652 ரூபாய் கொடுத்து மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுவந்த மக்கள். இன்று (ஆகஸ்ட் 1) முதல் 590 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indane gas price reduce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->