தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் அதிகரிப்பு!
Increase in coastal length of Tamil Nadu
தமிழ்நாட்டின் கடற்கரை 960 கி.மீல் இருந்து 1,068 கி.மீ ஆக விரிவடைந்துள்ளது.புதுச்சேரி கடற்கரை - 42.65கி.மீ நீளம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடற்கரை பகுதி கடந்த 53 ஆண்டுகளில் 48% விரிவடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது . அதுமட்டுமல்லாமல் 1970-ல் இந்திய கடற்கரைப் பகுதியின் நீளம் 7,516 கி.மீ ஆக இருந்தது தற்போது இது 2023-24ல் 11,098 கி.மீ ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக குஜராத்தின் கடற்கரை பகுதி 1,214 கி.மீல் இருந்து 2,340 கி.மீ ஆக விரிவடைந்துள்ளது உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக நீண்ட கடற்கரையை கொண்ட இந்திய மாநிலமாக குஜராத் நீடிக்கிறது. அதேபோல தமிழ்நாட்டின் கடற்கரை 960 கி.மீல் இருந்து 1,068 கி.மீ ஆக விரிவடைந்துள்ளது.
புதிய, மேம்பட்ட அளவை மூலம் இந்திய கடற்கரையின் நீளம் இதுவரை கருதப்பட்டது போல சுமார் 7500 கி.மீ. அல்ல, மாறாக சுமார் 11100 கி.மீ. என்று அரசு அறிவித்துள்ளது.
புதிய அளவீட்டின்படி நீளம் - 11098.81 கி.மீ.
பழைய தரவுவின்படி நீளம்: 7516.6 கி.மீ.
மாநில வாரியாக கடற்கரை நீளம்:
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 3083.50 கி.மீ.
குஜராத் - 2340.62 கி.மீ.
தமிழ்நாடு - 1068.69 கி.மீ.
ஆந்திரப் பிரதேசம் - 1053.07 கி.மீ.
மகாராஷ்டிரா - 877.97 கி.மீ.
மேற்கு வங்காளம் - 721.02 கி.மீ.
கேரளா - 600.15 கி.மீ.
ஒடிசா - 574.71 கி.மீ.
கர்நாடகா - 343.30 கி.மீ.
கோவா - 193.95 கி.மீ.
லட்சத்தீவுகள் - 144.80 கி.மீ.
டாமன் & டையூ - 54.38 கி.மீ.
பாண்டிச்சேரி - 42.65 கி.மீ.
English Summary
Increase in coastal length of Tamil Nadu