12 வயது சிறுமியிடம் அத்துமீறிய 53 வயது கொடூரன்.. விழுப்புரத்தில் பேரதிர்ச்சி.!! 
                                    
                                    
                                   IN VILUPURAM CHILD SEXUAL TORTURE OLD MAN ARREST 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள அருங்குருகை கிராமத்தை சார்ந்த 12 வயதுடைய சிறுமி, இங்கிருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 
இவர் இன்று அதிகாலை நேரத்தில் அங்குள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்துள்ளார்.  இந்த நேரத்தில் இங்குள்ள வடக்குத்தெரு பகுதியை சார்ந்த கூலித் தொழிலாளியான பன்னீர் செல்வம் (வயது 53) என்பவன் பின் தொடர்ந்துள்ளான். 

சிறுமியை பின் தொடர்ந்த காம கொடூரன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி இது தொடர்பாக தந்தையிடம் கூறி கதறியழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது தொடர்பாக புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த பன்னீர் செல்வதை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       IN VILUPURAM CHILD SEXUAL TORTURE OLD MAN ARREST