சொத்து தகராறில் சிறுமியை கடத்தி பலவந்தப்படுத்த போவதாக தந்தையை மிரட்டிய கும்பல்.! தந்தை கையில் எடுத்த ஆயுதத்தால்., உறவினர்களுக்கு நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுக்கத்தூர் அருகேயுள்ள கிராமத்தில் 14 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தைக்கும் அதே பகுதியை சார்ந்த மற்றொருவருக்கும் வீட்டுமனை பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததை அடுத்து., சிறுமியின் பெற்றோருக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட நபர் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். 

அதன்படி நேற்று சிறுமியை சுமார் 5 பேர் கொண்ட கும்பலானது கடத்தி சென்று., அங்குள்ள ரவி என்பவரின் இல்லத்தில் அடைத்து வைத்து., சிறுமியின் தந்தைக்கு தொடர்பு கொண்டு., சொத்து தகராறு பிரச்சனையில் சிறுமியை கடத்தியுள்ளதாகவும்., சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க போவதாகவும் மிரட்டியுள்ளான். 

இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் தனது உறவினர்களை அழைத்த கொண்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். அந்த சமயத்தில்., இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை அடுத்து., ஐவர் கும்பலில் இருந்த ஒரு நபரை கத்தியால் சிறுமியின் தந்தை குத்தியுள்ளார். 

இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து., சிறுமியின் தந்தை மற்றும் அவரது உறவினர்களை வீட்டில் ஆயுதங்களை காட்டி மிரட்டி கட்டிபோட்டுள்ளனர். இந்த தகவலானது காவல் துறையினருக்கு தெரியவரவே., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமி மற்றும் சிறுமியின் தந்தை., உறவினர்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

English Summary

in vellore girl kidnapped and try to rap her father inject knife


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal