கண்ணை மறைத்த காதல்கள்.. மகளின் தலையில் கல்லைப்போட்ட பெற்றோர்.. வாழ்க்கையை இழந்த இளம்பெண்..!! விசாரணையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கணியம்பாடி அடுத்துள்ள கம்மவான்பேட்டை அருகேயுள்ள மொட்டை மலையில் முருகன் கோவிலானது கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் பணிகளை பார்க்க அப்பகுதி மக்கள் சென்று வரும் நிலையில்., மலையின் பாதிவழியில் உள்ள பள்ளத்தில் 2 வயது பெண் குழந்தையின் பிணமொன்று இருந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக அங்குள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் குழந்தையை கொலை செய்து வீசியதும்., இது நடந்து 4 நாட்கள் இருக்கலாம் என்றும் தெரியவந்தது. 

மேலும்., குழந்தையின் உடலை மறைக்க பெரிய அளவிலான பாறாங்கல்லை குழந்தையின் மீது போட்டு மூடியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் ஆற்காடு பகுதியை சார்ந்த தங்கமணி என்பவர் குழந்தை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். மேலும்., குழந்தையுடைய தாயாரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மஞ்சுளாவை (வயது 23) கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னனதாக மஞ்சுளா ராஜாமணி என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்த நிலையில்., குழந்தை குறித்து கேட்டதற்கு முன்னுக்கு பின்னர் முரணாக பதிலளித்துள்ளார். மேலும்., இவரது திருமணத்திற்கு விலையாக குழந்தையை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மஞ்சுளா முதல் திருமணமாக அவரது தாய்மாமனை திருமணம் செய்து கொண்ட நிலையில்., தேனி மாவட்டத்தினை சார்ந்த பாண்டியன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து கணவரை பிரிந்து தாழனூரில் வசித்து வந்த நிலையில்., ஆற்காடு பகுதியை சார்ந்த வரகூர்புதூர் பகுதியை சார்ந்த ராஜாமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜாமணியை திருமணம் செய்ய முடிவு செய்து இவர்களின் திருமணத்திற்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று குழந்தையை கொலை செய்து., கொலை செய்த மறுநாளே திருமணமும் நடந்துள்ளது என்ற முதற்கட்ட தகவல் வெளியான நிலையில்., தற்போது விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.

தற்போது 23 வயதாகும் நான் வேலூரில் இருக்கும் ஷூ கம்பெனியில் பணியாற்றி வந்தேன். எனது பெற்றோர் எனது விருப்பத்திற்கு மாறாக என்னை விட வயதில் இரண்டு மடங்கு அதிகம் உள்ள தாய்மாமாவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து வைத்தனர். இந்த நேரத்தில் என்னுடன் பணியாற்றி வந்த தோழிகள் மற்றும் ஊரில் இருக்கும் தோழிகள் எனக்கும் - கணவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தை காண்பித்து கிண்டல் செய்து வந்தனர். இதனால் ஏற்பட்ட மன வெறுப்பின் காரணமாக வாழ பிடிக்காமல் தாயாரின் வீட்டிற்கு திரும்பி வந்த நிலையில்., அக்காவின் உறவுக்காரான தேனி மாவட்டத்தை சார்ந்த பாண்டியன் என்பவருடன் காதல் மலர்ந்தது. நாங்கள் இருவரும் அவ்வப்போது அலைபேசியில் மட்டும் பேசி வந்த நிலையில்., எங்களுக்குள் நெருக்கம் அதிகமாகி இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். 

நாங்கள் இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்து வந்த நிலையில்., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நேரத்தில்., வேலூரை அடுத்துள்ள வரகூர்புதூர் பகுதியை சார்ந்த ராஜாமணி என்பவருடன் பணிக்கு சென்று வரும் போது பழக்கம் ஏற்பட்டது. மேலும்., எனக்கு முதல் திருமணம் முடிவதற்கு முன்னதாகவே ராஜமாணிக்கத்தை தெரியும் என்பதால் நாங்கள் பழகி வந்தோம். மேலும்., ராஜமாணிக்கம் என்னை நினைத்து கொண்டு வாழ்வதாக தெரிவித்ததை அடுத்து., கணவரை பிரிந்து வந்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் அலைபேசியில் தெரிவித்தார். இதனையடுத்து அவருடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் கடந்த 23 ஆம் தேதியன்று கணவரிடம் இருந்து பிரிந்து குழந்தையை அழைத்துக்கொண்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தேன். 

இந்த சமயத்தில் வந்த காதலன் ராஜாமணி இரு சக்கர வாகனத்தில் தன்னை அழைத்துக்கொண்டு கம்மவான்பேட்டை மொட்டை மலையில் இருக்கும் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து கையுடன் தாலியையும் கொண்டு வந்துள்ளார். இந்த நேரத்தில் குழந்தையை இடையூறாக இருப்பதை எண்ணி., இக்குழந்தை நமக்கு வேண்டாம் என்றும்., நாம் மற்றொரு குழந்தையை பெற்றெடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார். இதனையடுத்து புதிய வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட நான் குழந்தையை கொலை செய்ய சம்மதித்து., மலை மீதிருந்து குழ்நதையை கொலை செய்து., மலைக்கு சென்று திருமணம் செய்து புறப்பட்டோம் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore child murder by mom due to affair feelings


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal