திருப்பூர் விபத்தின் திக் திக் நொடிகள்... காவல் துறையினர் விசாரணையில் வெளியான பதைபதைப்பு தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில், டைல்ஸ் கற்களை ஏற்றுக்கொண்ட கண்டைனர் லாரியொன்று வேகமாக சென்று கொண்டு இருந்துள்ளது. 

இந்த நிலையில், இந்த லாரியும், இதே சாலையில் எதிர்திசையில் வந்து கொண்டு இருந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மூன்று பெண்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். 

இதுமட்டுமல்லாது மேலும் பலர் காயமடைந்த நிலையில், இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் இது தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பலருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த விசாரணையில் கேரள அரசு சொகுசு பேருந்து எர்ணாகுளம் நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்துள்ளது. டைல்ஸ் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த கண்டைனர் லாரியானது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மேலும், லாரியின் டயர்கள் வெடித்து நிலைதடுமாறி, எதிர்திசையில் சென்றுள்ளது.

இதன்பின்னர் லாரியும் - பேருந்தும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து அரங்கேறியுள்ளதும், முதற்கட்டமாக 9 பேர் சம்பவ இடத்திலேயே  பலியான நிலையில், 11 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக பலியாகினர். மொத்தமாக 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான தகவலை அறிந்த பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tiruppur bus accident police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->