லஞ்சம் வாங்கிய பெண் வக்கீல்.! அதிரடி நடவடிக்கை எடுத்த நிர்வாகம்.!  - Seithipunal
Seithipunal


ஆளுநர் உத்தரவின் படி குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அரசு தரப்பு சிறப்பு பெண் வழக்கறிஞரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் மகளிர் நீதிமன்றத்தில் தனலட்சிமி என்பவர் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார். இவர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. 

குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு சாதகமாக இவர் வாதாடி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து இவர் சமரசம் செய்து வைப்பதாக கூறி மிரட்டுவதாகவும் இவர் மீது புகார் எழுந்துள்ளது. 

இதனை தொடர்ந்து இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சில போராட்டங்களும் நடைபெற்றது. மேலும் சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டதாகவும், அத்துடன் சிறுமி தரப்பை வழக்கை திரும்ப பெறக்கோரி மிரட்டியதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆளுநரின் உத்தரவின்படி தனலட்சுமியை பணி நீக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in thiruvallur woman lawyer dismissed by governors action


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->