தினம் ஒரு சிறுமி, இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம்?.. ஆற்றில் குளிக்க சென்று நேர்ந்த சோகங்கள்.. தாமிரபரணி துயரங்கள்.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை பகுதியை சார்ந்த ஏராளமான பெண்கள் அதிகாலை நேரத்தில் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க செல்வது வழக்கமான ஒன்றாகும். இந்த விஷயத்தை உபயோகம் செய்து கொண்ட அப்பகுதியை சார்ந்த காம கொடூரன்கள், சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் தனியாக குளிக்க செல்வதை நோட்டமிட்டு வந்துள்ளனர். 

ஆட்கள் இல்லாத நேரத்தில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி அங்குள்ள புதர் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். மேலும், இதனை வெளியே சொன்னால் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற காரணத்தால் பெண்களும் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். 

சில பெண்கள் வெளியே சொன்னாலும், மகளின் எதிர்காலம் கருதி பெற்றோர்களும் வெளியே கூறாமல் இருந்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை தனக்கு சாதகமாக உபயோகம் செய்து கொண்ட கொடூர இளைஞர்களும், இதனை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  

இந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதியன்று அம்பை பகுதியை சார்ந்த 14 வயதுடைய சிறுமி தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ள நேரத்தில், இவர் தனியாக வந்திருப்பதை அறிந்த 2 கொடூரன்கள், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து புதருக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

சிறுமி நீண்ட நேரம் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுமியை தேடி அலையவே, சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறி கதறியழுதுள்ளார். மேலும், இது வெளியே தெரிந்தால் மகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எண்ணி பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்துள்ளனர்.  

இந்த நிலையில், இது தொடர்பான விஷயத்தை கவனித்து வந்த அப்பகுதியை சார்ந்த ராஜம்மாள் என்பவர் அம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்கள் அங்குள்ள ஊர்க்காடு பகுதியை சார்ந்த மூர்த்தி (வயது 31) மற்றும் மாரியப்பன் (வயது 28) என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவன்களை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in thirunelveli child girls and young girls sexual harassment police investigate


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->