நாடக காதலில் மயங்கி காதலனின் வீட்டிற்கு சென்ற சிறுமி.! பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரன்.! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அவர்களுக்கு தெரிந்த நபர்களால் பெரும்பாலும் வழங்கப்படுவது பெரும் சர்ச்சையை நம்முடைய ஏற்படுத்தியிருக்கிறது. 

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே உள்ள பி.அம்மாபட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி அங்குள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்த நிலையில்., நர்சிங் படித்து முடித்ததற்கு பிறகு திருமங்கலத்தில் உள்ள ஜோதிட நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக வேலைக்கு சென்ற சிறுமி., மாலையில் வீடு திரும்பாததால் இவரை தேடி அலைந்த பெற்றோர்., இவரை காணததால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இவரது புகாரை ஏற்ற காவல்துறையினர்., இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த சமயத்தில்., மாயமான இளம்பெண் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து ஒரு புகார் மனு அளித்தார். 

அந்த புகார் மனுவில்., நான் பணியாற்றிய ஜோதிட நிலையத்திற்கு அருகே இருக்கும் டீக்கடையில் பணியாற்றிய மணிவண்ணன் என்ற 27 வயது இளைஞருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்த வேளையில்., என்னிடம் ஆசை வார்த்தை கூறி அவனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றான். 

அந்த சமயத்தில்., அவரது வீட்டின் மாடியில் வைத்து என்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தான். இந்த நிலையில்., மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது எனக்கு தெரியவந்தது. நாடக காதலால் என்னை ஏமாற்றிய காம கொடூரனின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தகவல்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

in thirumangalam girl rapped by her lover by drama love


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal