தலைமையாசிரியர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! மதுரை நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகேயுள்ள மயிலாடும்பாறை கிராமப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பலியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ரவிச்சந்திரன் (வயது 55) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியரான இவர்., பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கியதை குற்றசாட்டு எழுந்தது. 

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கடந்த 2015 ஆம் வருடத்தின் போது அங்குள்ள கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து., அவர்களிடமும் புகார் அளித்திருந்தனர். 

இதனை அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில்., பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இந்த விசாரணைக்கு பின்னர் அங்குள்ள உத்தமபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒன்றியத்திற்கு மாற்றமும் செய்யப்பட்டார். 

judgement,

இதனையடுத்து பின்னர் வழக்கம்போல மீண்டும் நீக்கம் செய்யப்பட்ட பள்ளிக்கே மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து., இதனை அறிந்த பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து., ரவிச்சந்திரன் தலைமறைவானான். இதனைத்தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுவும் தொடுக்கப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கு விசாரணையில்., நீதிபதியின் முன்னிலையில் மாணவிகள் வாக்குமூலம் அளித்ததை அடுத்து., தலைமையாசிரியரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள நீதிபதியும் உத்தரவிட்டதை அடுத்து., போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து., தலைமறைவான தலைமைஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni school HM arrest police due to sexual harassment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->