பணத்திற்காக பாட்டியை பாடியாக்கிய பேரன்.. செங்கோட்டையில் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை விஸ்வநாதபுரம் புதுமனை தெரு பகுதியை சார்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவியின் பெயர் மும்தாஜ் (வயது 65). இவர்கள் இருவருக்கும் அசன் ஷா என்கிற மகன் இருக்கிறார். முகமது கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில், மும்தாஜ் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், மும்தாஜின் பேரனான அப்துல் சலாம் (வயது 25), அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது பாட்டியிடம் வந்து அவ்வப்போது செலவிற்கு பணம் கேட்டு சென்று வந்துள்ளார். நேற்றும் வழக்கம் போல தனது பாட்டியை காண வந்துள்ளார். இந்த நேரத்தில் பாட்டி தனக்கு வயதாகிவிட்டது என்றும், நீதான் தனக்கு பணம் கொடுத்து உதவ வன்னெடும் என்று கூறி ஆலோசனை கூறியுள்ளார். 

இதனை கேட்க மறுத்த அப்துல், தனக்கு கட்டாயம் பணம் வேண்டும் என்று கூறி சண்டையிட்டுள்ளார். மேலும், பாட்டியின் இல்லத்தில் இருந்த கட்டில், கிரைண்டர் போன்ற பொருட்களை உடைத்துள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படவே, இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் முகமதுவை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

இருப்பினும் பாட்டியின் மீது உள்ள ஆத்திரம் தீராத அப்துல் அதிகாலை நேரத்தில் பாட்டியின் இல்லத்திற்கு சென்று தகராறு செய்த நிலையில், வயதானவர் என்றும் பாராது சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் மும்தாஜ் சம்பவ இடத்திலேயே பலியாகவே, அப்துல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் காலை நீண்ட நேரம் ஆகியும் பாட்டியின் இல்லம் திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து வீட்டை பார்க்கையில் மும்தாஜ் பிணமாக கிடந்துள்ளார். 

இதனையடுத்து இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மும்தாஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்துலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tenkasi grand ma murder by grand son


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal