சென்னை., கடலூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு விடுமுறை.. கனமழை எதிரொலி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்து கடந்த இரண்டு நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது, இந்த மழையானது, இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

இலங்கை தெற்கு கடல் பகுதியில் புயல் சின்னம் இருப்பதால் குமரிக் கடல், மாலத்தீவு, லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க இன்று செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

rain, rain tamilnadu,

இந்த நிலையில்., தொடர்மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து., மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தொடர் மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து., அம்மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

இதனைப்போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தும்., திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும்., காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தும்., சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தும்., இராமநாதபுரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilnadu 6 district leave announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->