மார்பக புற்றுநோய் பாதிப்பு குறித்த விஷயத்தில், தமிழகத்திற்கு பேரதிர்ச்சியாக வெளியான தகவல்...!! - Seithipunal
Seithipunal


மேலை நாடுகளை சார்ந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் இருந்து வந்தது. இந்தியாவை பொறுத்த வரையில் குறைவாக இருந்த மார்பக புற்றுநோய் பாதிப்பு, தற்போது மிகவும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. 

தென்மாநிலங்களில் தமிழகத்தில் அதிகளவு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. மேலும், தமிழகத்தில் வருடத்திற்கு 4 விழுக்காடு அளவில் மார்பக புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

இந்தியாவிலேயே உத்திரபிரதேசம் மாநிலத்தில் அதிகளவு மார்பக புற்றுநோயாளிகள் இருப்பதாகவும், இந்த மாநிலத்தில் சுமார் 24 ஆயிரத்து 181 பேருக்கு மார்பக புற்றுநோய் உள்ளதாகவும் தெரியவருகிறது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 16 ஆயிரத்து 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது இடத்தில் இருக்கும் மேற்கு வங்காள மாநிலத்தில் சுமார் 12 ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்ட்டுள்ளதாகவும், நான்காவது இடத்தில் இருக்கும் பீகார் மாநிலத்தில் சுமார் 11 ஆயிரத்து 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்திற்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ள நிலையில், சுமார் 10 ஆயிரத்து 269 பேர் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மார்பக புற்றுநோய் தாக்குதல் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாகவும், கடந்த 2016 ஆம் வருடத்தை பொறுத்த வரையில் சுமார் 9 ஆயிரத்து 486 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2017 ஆம் வருடத்தில் 9 ஆயிரத்து 870 பேர் பாதிக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டு வருடங்களை விட தற்போது அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கர்நாடக மாநிலத்தை பொறுத்த வரையில் தமிழகத்தை விட 10 விழுக்காடு நோய்த்தாக்குதல் குறைவாக உள்ளதாகவும், ஆந்திரப்பிரதேசம் மற்றும் கேரள மாநிலத்தில் 40 விழுக்காடு நோய்த்தாக்குதல் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னை புற்றுநோய் மருத்துவமனை நிபுணரான மருத்துவர்.சாமிநாதன் அவர்களிடம் கேட்ட சமயத்தில், சென்னை மாநகரில் மார்பக புற்றுநோய் வருடத்திற்கு வருடம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுமார் 1 இலட்சம் பெண்களை கணக்கில் எடுத்து கொண்டால், 2 விழுக்காடு வரை மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு விகிதம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம் குறித்த விளக்கம் இல்லாத நிலையில், உணவு பழக்கவழக்கமும் முக்கிய பங்காக அமைகிறது. பாக்கெட் உணவுகள், நொறுக்கு தீனிகள், துரித உணவுகள் போன்றவற்றை அதிகளவு சாப்பிடப்பட்டு வருவதால், உடலின் ஹார்மோன் பாதிப்படைகிறது. இது மார்பக புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது. 

இதனைப்போன்று உடல் பருமன், பழக்க வழக்கத்தால் மரபணுவில் ஏற்படும் மாற்றம், பரம்பரை பரம்பரையாக புற்றுநோய் அணுக்கள் பரவுதல் போன்றவை மார்பக புற்றுநோயின் காரணிகளாக இருக்கிறது. மேலை நாடுகளை பொறுத்த வரையில் சுமார் 50 வயது முதல் 60 வயது பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் நிலையில், இந்தியாவில் 40 வயதில் இருந்து 50 வயது பெண்களுக்கு அதிகளவில் மார்பக புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது. 

மேலும், இதில் பேரதிர்ச்சியாக சுமார் 20 வயது முதல் 30 வயதுள்ள பெண்கள் கூட மார்பக புற்றுநோய்க்கு ஆளாகி வருவதாக பெரும் அதிர்ச்சி தகவலாக தெரியவந்துள்ளது. மார்பக புற்றுநோயை இந்தியாவில் முன்கூட்டியே கண்டறியும் மற்றும் தடுக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், பரிசோதனைகளின் மூலமாக முன்கூட்டியே கண்டறிந்து பாதிப்புகளை குறைக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilnadu 5 th place for girl affected breast cancer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->