அடிக்கடி இளம்பெண்ணிற்கு வந்த ஆபாச மர்ம அழைப்பு.! நேரில் வர சொல்லி திட்டமிட்டதில் அரங்கேறிய பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகில் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். பெண்களுக்கு தெரியாத நபர்களில் இருந்து சொந்த கணவரும் கொடுமை இளைக்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.

இன்றைய நாட்களில் அலைபேசியின் மூலமாக பல விதமான நன்மைகள் கிடைத்தாலும்., சில சமயங்களில் அதிக துன்பமும் இந்த அலைபேசியால் ஏற்பட்டு., அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை அறிந்த நாம் அது குறித்து சிந்தித்தாலே மனதில் ஏனோ ஒரு பயம் ஏற்படுகிறது. 

இந்த நிலையில்., மதுரை மாவட்டத்தில் உள்ள சுலைமான் பகுதியில் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்து கொண்டு இருந்தார். இவரது அலைபேசி எண்ணை அறிந்த மர்ம நபர் ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்து வந்துள்ளார். 

இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் தனது வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்படும் என்ற எண்ணத்தில்., இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்த பெண்., மர்ம நபரிடம் அன்பாக கூறியும்., திட்டியும் பார்த்துள்ளார். 

மர்ம நபர் இவரின் வார்த்தைகளை கேட்காதது போல செயல்பட்டு வந்த நிலையில்., இவரின் தொல்லையை தாங்க இயலாமல் தனது உறவினரிடம் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். இவர்களின் திட்டப்படி மர்ம நபர் தொடர்பு கொள்ளும் சமயத்தில் நேரில் வர சொல்ல கூறி கூறியுள்ளார். 

இதனையடுத்து மறுமுனையில் பேசிய மர்ம நபர் இவரின் பேச்சை கேட்டு நேரில் வந்துள்ளார். அந்த சமயத்தில் நேரில் வந்த மர்ம நபர் முதியவராக தோற்றமளித்துள்ளார். இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான உறவினர்கள்., அவரை அடித்து துவைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்தனர். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., நேரில் வந்த முதியவர் தேனி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சார்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Madurai man speak sexual harassment with girl relations attack police investigation


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal