மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற நபரை ஓடவிட்டு அடித்து கொலை செய்த கணவர்.! மதுரையில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்கள் பல விதமான பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். பலவிதமான முறையில் வரும் பாலியல் தொல்லைகளுக்கு மத்தியில் பெண்கள் கடும் போராட்டத்தை நிகழ்த்தி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில்., உறங்கிக்கொண்டு இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ள செய்தியானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியை சார்ந்தவர் பாலமுருகன். இவர் தனது மனைவியுடன் அங்குள்ள மீனாட்சி பஜார் அருகேயுள்ள பகுதியில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்., இவர்கள் நால்வரும் இல்லத்தில் நேற்று இரவு உறங்கிக்கொண்டு இருந்தனர். 

இந்த சமயத்தில்., இவரது வீட்டிற்குள் ஏறி குதித்த மர்ம நபர் பாலமுருகனின் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் அலறவே., இவரின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன் வந்ததை கண்டு மர்ம நபர் தப்பியோட முயன்றுள்ளார். 

தனது மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ள தகவலை அறிந்து ஆத்திரமடைந்து அங்கிருந்த கட்டையால் பாலமுருகன் தெருவில் ஓடவிட்டு கட்டையால் அடித்து துவைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த கொடூரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான். இந்த சம்பவத்தை அறிந்த காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

English Summary

in madurai husband killed a man when harassment with her wife night sleeping


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal