50 அடி பள்ளத்தில் விழுந்த மனைவியின் மீது கல்லை போட்டு கொலை செய்த கொடூர கணவன்.! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிலுவை நகர் பகுதியை சார்ந்தவர் மரிய டல்லஸ். இவரது மனைவியின் பெயர் அருள் சுனிதா. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து., 17 வருடங்கள் ஆகும் நிலையில்., இவர்கள் இருவருக்கும் மகன் - மகள் உள்ளனர். மரிய டல்லஸ் தனது தள்ளுவண்டியின் மூலமாக., பேன்சி பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். 

இந்த தருணத்தில்., கணவன் - மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுவதும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இந்த சண்டையை போன்று., நேற்று முன் தினமும் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மரிய டல்லஸ் தனது மனைவியை தாக்கியுள்ளார். 

இதனால் பலத்த காயமடைந்த சுனிதா அலறி வலியால் துடித்துள்ளார். மேலும்., இவரது அடியில் இருந்து தப்பிக்க வலி தெரியாமல்., வீட்டில் இருந்து வெளியேறிய சென்றுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய சுனிதாவை துரத்தி சென்று அடித்துள்ளார். பின்னர் அங்கிருந்த சுமார் 50 அடி பள்ளத்தில் சுனிதாவை தள்ளிவிட்டு., அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். 

died, killed, murder, suicide attempt, தற்கொலை, கொலை, குற்றம்,

50 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்து., உயிருக்கு போராடிய அவரின் அலறல் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்., அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில்., இது குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில்., சுனிதா மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து., சுனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மரிய டல்லஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in kanniyakumari wife killed by husband police investigation going on


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal