நான்காம் வகுப்பு மாணவர்களிடம் கட்டாய மதமாற்றம்.! ஈரோட்டில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள காலகட்டத்தில் மதமாற்ற பிரச்சனைகள் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. அவரவர்களுக்கு அவர்கள் நம்பும் வழி சரியாக இருப்பின்., பிற மதத்தவரை கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்பதும் புரியவில்லை., உலகம் குறித்த விழிப்புணர்வு இல்லாத மாணவர்களிடம் மதத்தை திணிக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி தாலுகா அருகில் இருக்கும் கொல்லங்கோவில் பேரூராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதியை சார்ந்த மாணவ - மாணவியர்கள் சுமார் 79 க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியராக செந்தமிழ் செல்வி என்பவர் பணியாற்றி வருகிறார். 

kodumudi, kodumudi railway station

நான்காம் வகுப்பு ஆசிரியராக ஜோசப் லீன் கிரேஷ் என்ற 48 வயதுடைய ஆசிரியரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில்., கிரேஷ் கடந்த சில நாட்களாக தனது வகுப்பறையில் மாணவ - மாணவியர்களிடம் கிறிஸ்தவ மத பாடல்களை பாட வலியுறுத்தியும்., கிறிஸ்தவ மதம் குறித்த புத்தகங்களை தொடர்ந்து வழங்கியும்., அவர்களை பிரார்த்தனையில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தியும் வந்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவ - மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் தெரிவிக்கவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியரான செந்தமிழ்ச்செல்வியிடம் நேற்று முன்தினம் புகார் செய்துள்ளனர். 

region converting, region changing, christian

இந்த சம்பவம் குறித்து அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால்., ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து., பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவமானது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode school teacher impulse christian region


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->