ஈரோட்டில் ஒரு எலுமிச்சம்பழத்தின் விலை ரூ.30 ஆயிரம்.!! அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்., சந்தோசமாக வாங்கி சென்ற பக்தர்.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சிவகாரியை அடுத்துள்ள விளக்கேத்தி புதுஅண்ணாமலைபாளையம் பகுதியில் சுமார் 200 வருடங்கள் பழமை கொண்ட பழந்திண்ணி கருப்பசாமி கோவிலானது உள்ளது. 

இந்த கோவிலில் வருடம் தொடரும் நடக்கும் மகா சிவராத்திரியன்று அனைத்து கோவில்களை போலவே., சிவராத்திரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்., இந்த வருடமும் மகா சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. 

மகா சிவராத்திரிக்கான பூஜைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு சாமியின் பாதத்தில் எலுமிச்சம்பழம் ஒன்று வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த எலுமிச்சம் பழமானது மறுநாள் காலையில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டு., ஏலத்திற்கு தயார் செய்யப்பட்டது. 

ரூ.2 ஆயிரத்தில் துவங்கிய இந்த ஏலத்தொகையானது பக்தர்களின் போட்டிகளில் ரூ.30 ஆயிரத்திற்கு முடிக்கப்பட்டது. இந்த எலுமிச்சம்பழத்தை ஈரோட்டை சார்ந்த சக்திவேல் என்பவர் ரூ.30 ஆயிரம் வழங்கி வாங்கி சென்றார். 

இது குறித்து அவரிடம் கேட்ட போது., சாமியின் பாதத்தில் இருந்த எலுமிச்சம்பழத்தை வாங்கி சென்று வெள்ளி காசுடன் வீட்டில் வைத்து பூஜை செய்து வர பல நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும்., விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வாழைப்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. 

மேலும்., சென்ற வருடத்தின் மகா சிவராத்தியின் போது ரூ.6 ஆயிரத்திற்கு எலுமிச்சம்பழம் ஏலத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது.. இந்த வருடத்தில் பெற்ற ஏலத்திற்கான தொகையை வரும் வருடத்தின் மகா சிவராத்திரியின் போது செலுத்தினால் போதுமானது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in erode a lemon price rs 3000 taken from temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->