அணில் அம்பானியும், சணல் சாத்தப்பனும் நிம்மதி பெருமூச்சு.. வீட்டில் இருந்து படையெடுக்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை பகுதியில் மண்பானை தயாரிப்பு தொழில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தற்போது கோடைகாலம் துவங்க நாட்கள் இருக்கும் நிலையில், பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. 

இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், சுமார் 20 நாட்களுக்கும் மேலாக குஜிலியம்பாறை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான அனல் காற்று வீசி மக்களை வாட்டி வதைத்தது. 

இதனால் மக்கள் கரும்பு சாறு, இளநீர், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி, பழச்சாறுகளை அதிகளவில் வாங்கி வந்த நிலையில், மண்பாண்டம் விற்பனையும் அதிகரித்துள்ளது.குஜிலியம்பாறை பகுதியில் 15 ற்கும் மேற்பட்ட குடியிருப்பில் இருப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக மண்பானை செய்யும் தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துள்ளதால் மண்பானை உற்பத்தி செய்யும் பணியை அதிகரித்துள்ளனர். தற்போதே விற்பனையும் சூடு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் பிரிட்ஜ் இல்லாத நபர்கள் மற்றும் பிரிட்ஜ் இருந்தாலும் மண்பானை நீரில் உள்ள சுவை இல்லாததால் இயற்கைக்கு மக்கள் அதிகளவு மாறி வருகின்றனர். சிறிய மண்பானை ரூ.90 க்கும், பெரிய மண்பானை ரூ.150 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதனைப்போல குழாய் வைத்துள்ள மண்பானை ரூ.250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பல தனியார் நிறுவனங்களிடம் சென்று ப்ரிட்ஜ் எடுத்து சொல்லும் விலைக்கு வாங்கி வரும் மக்கள், இயற்கை மண்பாண்ட தொழிலாளிகளிடம் பேரம் பேசாமல் மண்பாண்ட பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in dindigul people went and buy clay pot for cooled drinking water


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->