இளம்பெண்ணை சீரழித்து பதவிக்கு பணயம் வைத்த அதிமுக பிரமுகர்.! அரங்கேறிய கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சாலக்கரை பகுதியை சார்ந்தவர் அம்சவல்லி (வயது 35). இவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனுவை வழங்கியுள்ளார். இது குறித்த புகார் மனுவில் அவர் தெரிவித்தாவது., 

என் கணவர் சரவணன் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். எனது உறவினர் மற்றும் முன்னாள் அதிமுக கவுன்சிலர் வினோத்ராஜ் என்னிடம் அவ்வப்போது பேசி வந்தார். உறவினர் என்பதால் நானும் மதிப்புடன் பேசி வந்தேன். 

இந்த நிலையில்., என்னிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் ரீதியாக உபயோகம் செய்து கொண்டார். மேலும்., கடலூரில் இருக்கும் விடுதிக்கு வரவழைத்து வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்து., இதனை காட்சிகளாக அலைபேசியில் பதிவு செய்து கொண்டார். 

sexual harassment, sexual abuse, sexual torture,

மேலும்., இதனை வைத்து நாளடைவில் இணையத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி வந்தார். மேலும்., சிங்கப்பூரில் எனது கணவர் பணியாற்றி பணம் அனுப்பிய நிலையில்., அவர் வாங்கிய கடன் ரூ.1 கோடியை என்னிடம் இருந்து பெற்று கொண்டார். 

இதுமட்டுமல்லாது கடலூரில் இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகருடன் தொடர்பு வைத்துக்கொள்ள என்னை வற்புறுத்தி வந்தான். தனது பதவி ஆசைக்காக கடலூரில் இருக்கும் கட்சி பிரமுகருடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள மிரட்டி வருகிறார். 

இது தொடர்பாக எனது உறவினர்கள் மற்றும் ஊர் பஞ்சாயத்தாரிடம் தெரிவித்த சமயத்தில்., வினோத்ராஜ் என் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் பொய் புகார் ஐந்து மிரட்டி வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கி வைத்துக்கொண்டுள்ளார். மேலும்., கூலிப்படை மூலமாக என் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார். இவரின் மீது வழக்குப்பதிவு செய்து., நான் இழந்த பணம் மீட்டு தரப்பட வேண்டும் என்றும்., ஆபாச படத்தை அளிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore girl sexual harassment by admk party member


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal