கோவை காதலருடன் வீட்டிற்கு வந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்., மகிளா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சீரநாயக்கன்பாளையத்தை சார்ந்த பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவி., கடந்த 26 ஆம் தேதியன்று தனது காதலனுடன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். 

இந்த சமயத்தில் இவர்களை இடைமறித்த 6 பேர் கொண்ட கும்பலானாது., மாணவியை மறைவான இடத்திற்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து., இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டன் (வயது 30)., பப்ஸ் கார்த்தி (வயது 28)., ராகுல் (வயது 21)., பிரகாஷ் (வயது 22)., கார்த்திகேயன் (வயது 28) மற்றும் நாராயண மூர்த்தி (வயது 32) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். 

sexual harassment, sexual torture, sexual abuse,

இவன்களின் மீது போக்ஸோ சட்டம்., கொலை மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழாக வழக்குப்பதிவு செய்து மகளீர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கோவை சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையானது கோயம்புத்தூரில் இருக்கும் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., கடந்த 9 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மாணவி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 

இதனைத்தொடர்ந்து மணிகண்டனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்ததை அடுத்து மேற்கொண்ட விசாரணையில்., அனைவரும் ஒரே வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள நிலையில்., கொடூரனை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore sexual harassment case court order culprit to jail after investigation


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal