பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற மக்கள்.! வெறிச்சோடிய சென்னை.!  - Seithipunal
Seithipunal


சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் நேற்று சென்னையிலிருந்து பொங்கலை கொண்டாட புறப்பட்டனர்.

எங்கு பார்த்தாலும் பேருந்துநிலையம் முழுதும் பயணிகளின் தலையாக தான் இருந்தது. முன்பதிவு செய்திருந்தவர்களின் டிக்கெட்டுகள் பரிசோதித்த பின்னரே அவர்கள் பேருந்தில் அனுமதிக்கப்பட்டனர். சென்னைக்கு அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளாக சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதன்காரணமாக திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படவில்லை. கோயம்பேட்டில் இருக்கும் 100 அடி சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக பலரும் நூறடி சாலையில் இறங்கி அங்கிருந்து பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றனர். கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் வழியாகவும், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாகவும் திருவண்ணாமலை  செல்லும் பேருந்துகள் ஆகியவை பெருங்களத்தூரில் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையிர் குவிக்கப்பட்டு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in chennai peoples went native to celebrate pongal festival


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->