மாமல்லபுரம் கிருஷ்ணரின் வெண்ணைப்பந்தை பார்க்க கட்டணம்..! எவ்வுளவு தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள சென்னையின் பிரதான சுற்றுலாத் தலமாக மாமல்லபுரம் இருந்து வருகிறது. இந்த மாமல்லபுரத்தில் கடந்த வாரத்தின் போது பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதுமட்டுமல்லாது அங்குள்ள கடற்கரைக் கோவில்., அர்ச்சுனன் தபசு., ஐந்து ரதம் போன்ற பகுதிகளில் வந்து சுற்றிப்பார்த்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றனர். இருபெரும் நாட்டு தலைவர்கள் தற்போது வந்து சென்றதை அடுத்து மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்றது. 

இதையடுத்து சுற்றுலா தலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கும் - சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில்., தற்போது மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையிலும்., மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் வந்து சென்று கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில்., தற்போது இந்திய சுற்றுலாப்பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்ல துவங்கியுள்ளனர். 

இந்த நிலையில்., அங்குள்ள வெண்ணை உருண்டை பாறையைச் சுற்றி பார்க்க இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி., வெண்ணை பாறையை சுற்றி பார்க்க டிக்கெட் ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 ஆகவும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மாமல்லபுரத்தில் இதற்கு முன்னதாக ஐந்து ரதம்., கடற்கரைக் கோவில் போன்ற பகுதிகளை சுற்றிப் பார்க்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்., தற்போது வெண்ணை உருண்டை பார்க்கவும் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai magapalipuram Krishna butter ball entrance fees introduced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->