சென்னை விமான நிலையத்தில் பாங்காக் விலங்குகள்.. சோதனையில் திகைத்துப்போன அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


பாங்காக் நகரில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ள விலங்குகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் இருந்து சென்னைக்கு விமானம் வந்துள்ளது. இந்த விமானத்தில் விலங்குகளை கடத்தி வந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. 

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளிடம் தொடர் சோதனையினை மேற்கொண்டனர். இந்த சோதனையில், சென்னையை சார்ந்த சுரேஷின் பெட்டிகள் சந்தேகத்திற்கு இடமளித்துள்ளது. 

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் சுரேஷ் கொண்டு வந்திருந்த பெட்டியில் வனவிலங்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பெட்டிகளில் 2 சிறிய ரக குரங்குகள், சிவப்பு நிற கைகளுடைய 3 குட்டி குரங்குகள், அணில்கள் மற்றும் பல்லி என மொத்தமாக 12 ஊர்வனவும் மீட்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து பாங்காக் வன விலங்குகளுக்கு நமது இந்திய காலநிலை ஒத்துக்கொள்ளாது என்ற காரணத்தால், பாங்காக் நாட்டிற்கு மீண்டும் அவற்றை அனுப்பும் பணியை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in chennai International airport Bangkok animals rescued


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->