ஓடும் இரயிலில் ஏற முயன்ற பெண்ணிற்கு நொடிப்பொழுதில் நேர்ந்த சோகம்.! கடவுளாக காட்சி தந்த அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து தினமும் சுமார் 20 க்கும் மேற்பட்ட தென்மாவட்ட இரயில்கள் புறப்பட்டு செய்கிறது. இந்த இரயில்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் பயணத்தை தொடருகின்றனர். 

சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் உழவன் அதிவிரைவு வண்டியானது இரவு 10.40 மணிக்கு புறப்பட தயாராக நான்காவது நடைமேடையில் நின்று கொண்டு இருந்தது. இந்த இரயிலில் பயணம் செய்வதற்கு பீகார் மாநிலத்தை சார்ந்த அஸ்வினி குமார் மற்றும் அவரது மகள் அனாமால் சர்மாவுடன் இரயில் நிலையத்திற்கு தங்களின் உடமைகளுடன் வந்தனர். 

இரயில் கிளம்பியதை அடுத்து தனது மகளை முதலில் இரயிலில் ஏற்றிவிட அஸ்வினி முயற்சித்ததை அடுத்து., இரயிலின் வேகமானது அதிகரித்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய அனாமால் தவறி விழுந்தார். சிறுமியை ஒரு கையில் பிடிக்க முயற்சித்தும் சிறுமியின் பிடி கிடைக்காததால்., அவர் உயிருக்கு பதறியபடி அலறவே., இவர்களின் அலறலை கண்ட காவல் துறையினர் உடனடியாக செயல்பட்டு சிறுமியை நடைபாதையில் இழுத்து உயிரை காப்பாற்றினர். 

இதனையடுத்து சிறுமியை மீட்ட காவல் துறையினர்., அவருக்கு முதலுதவி சிகிச்சையை அளித்துவிட்டு., பின்னர் ஓடும் இரயிலில் எற கூடாது என்று இருவரையும் எச்சரித்து மற்றொரு இரயிலில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மகளை காப்பாற்றிய அதிகாரிக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்து சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai egmore station girl saved by officers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->