விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம்..ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!
In celebration of Vijay's birthday a medical camp was held A large number of public participated
தருபுரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை மாவட்டசெயலாளர் தாபா சிவா தொடங்கி வைத்தார்.
தமிழக வெற்றிக்கழக தலை வர் விஜய்யின் 51-வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக சுற்றுச்சூழல் அணி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம்தருமபுரி இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயலானர் தாபா சிவா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார் மாவட்ட சுற்றுச்சூழல் அணி செந்தில்நாதன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டனர் .
இந்த நிகழ்ச்சியில் சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் விவசாய அணி மணி, மகளிர் அணி சத்யா, இளைஞரணி விமல்ராஜ், வர்த்தக அணி கார்த்திக், தொண்டரணி சுரேஷ், தகவல் தொழில் நுட்ப அணி தினேஷ், மாணவர் அணி அதியமான், செயற்குழு உறுப்பினர் தாரணி, இலக்கியம்பட்டி எம் வெங்கடேஷ், உறுப்பினர் சேர்க்கை அணி அமைப்பாளர் அஜித், விவசாய ஒன்றியம் விஜி,சுற்றுச்சூழல் ஒன்றியம் சிவா,கார்த்தி, பரமசிவம், திருப்பதி, பாலாஜி, இலக்கியம்பட்டி சுற்றுச்சூழல் அணி நிர்வாகி கணேஷ், பிரவீன் குமார், பெரியண்ணன், கோவிந்தன், தென்றல், சக்தி குமார், ஜீவா, உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
In celebration of Vijay's birthday a medical camp was held A large number of public participated