கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.! 
                                    
                                    
                                   Illegal relationship husband attack wife
 
                                 
                               
                                
                                      
                                            கள்ளக்காதலை கண்டித்ததால் தனது காதல் மனைவியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் சுபாரஜா என்ற பெண்ணை காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணேஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த மனைவி சுப்ரஜா கண்டித்துள்ளார்.
இதில், கடந்த ஜனவரி 19-ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவிலிருந்து சுப்ரஜாவை காணவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இதில், கணேஷ், சுப்ரஜாவை கொடூரமாக தாக்கி அருகில் உள்ள தோப்பில் உயிருடன் புதைத்துள்ளதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரே தனது மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Illegal relationship husband attack wife