மோகத்தால் ஏற்பட்ட சோகம்.! ஜாலியா இருக்கலாம்னு கூப்பிட்டு, காலி பண்ணிய கள்ளக்காதலி..! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள நந்தவன பகுதியை சார்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவியின் பெயர் வளர்மதி. இவருக்கு சொந்தமாக கேரளா மாநிலத்தில் 15 ஏக்கர் அளவிலான ஏலக்காய் தோட்டமானது இருக்கிறது. இவரிடம் கார் ஓட்டுநராக கேரளாவை சார்ந்த ராஜா என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

கணவரை பிரிந்து வளர்மதி 3 வருடமாக வசித்து வரும் நிலையில், கார் ஓட்டுநர் ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்கு நெருக்கமான மாறவே, வளர்மதியை ராஜா கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அரங்கேற்றப்பட்டு தோல்வியை தழுவியுள்ளது.

இந்த நேரத்தில், சமாதானம் செய்வதாக கூறி ராஜாவை போடிக்கு அழைத்த வளர்மதி, ராஜாவின் முகத்தின் மிளகாய்ப்பொடியை தூவி மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து குத்தி கொலை செய்துள்ளார். 

இந்த விஷயம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், வளர்மதியை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

illegal lover murder boyfriend in theni


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->