தகாத உறவால் தகராறு.! கள்ளகாதலியின் கண்ணை கட்டிங் பிளேயரால் குத்திய கள்ளக்காதலன்.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன், கள்ளக்காதலியின் கண்ணை கட்டிங் பிளேயர் வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த பால்ராஜ் மனைவி ராஜலட்சுமி என்பவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனியாக வசித்து வந்துள்ளார்.

ராஜலட்சுமிக்கும், மணிகண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், நேற்று மதியம் மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் ராஜலட்சுமி உடன் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் மது அருந்துவதற்காக ராஜலட்சுமி இடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று மறுப்பு தெரிவிக்கவே, இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த கட்டிங் பிளேயரை எடுத்து ராஜலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

மதுபோதையில் இருந்த மணிகண்டனுக்கு தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், ராஜலட்சுமியின் இரண்டு கண்களையும் குத்தி சேதப்படுத்தி உள்ளார். வலி தாங்க முடியாமல் ராஜலட்சுமி கத்தி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ராஜலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

illegal affair issue rajapalayam


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->