'என்னால் அந்தப் பயத்தை தாங்க முடியல'...! நீட் மறுதேர்வு எழுதவிருந்த மாணவன் தற்கொலை...! - கடிதத்தில் இருக்கும் அந்த கவலை நிறைந்த வரிகள்...! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நீட் தேர்வு மனஅழுத்தம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.ஓசூர்–பாகலூர் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சின்னசாமி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரின் மனைவி உத்தரகுமாரி. இவர்களுக்கு ஜீவானந்தம், வெற்றியானந்தம் என 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் ஜீவானந்தம் கோவையில் தங்கி அரசு போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருகிறார். இளைய மகன் வெற்றியானந்தம் (20), பிளஸ்-2 முடித்த பிறகு கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்காக தீவிரமாக தயாராகி வந்துள்ளார்.கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியாத நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்விலும் பங்கேற்றிருந்தார்.

பின்னர் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மறுதேர்வுக்காகவும் அவர் தீவிரமாக தயாராகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், மறுதேர்விலும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற கடுமையான அச்சம் மற்றும் மனஅழுத்தம் கடந்த சில நாட்களாக அவரை பெரிதும் பாதித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, வெற்றியானந்தம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். வீட்டிற்கு திரும்பிய அவரது தாயார் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே, மாணவர் எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதத்தையும் காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.

அதில், குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியதுடன், நீட் தேர்வு குறித்த அச்சம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக கடந்த ஒரு மாதமாக தூக்கமின்றி தவித்ததாக உருக்கமாக குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு மற்றும் அதனுடன் தொடர்புடைய கடுமையான மனஅழுத்தம் மீண்டும் ஒரு இளம் உயிரை காவுகொண்டிருப்பது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் மனநல பாதுகாப்பு, தேர்வு அழுத்த மேலாண்மை மற்றும் உளவியல் ஆலோசனையின் அவசியம் குறித்து இந்த சம்பவம் மீண்டும் தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I cant bear that fear student who was about write NEET re exam committed suicide Those anxious lines letter


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->