12 வயது மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய கொடூர கணவன்! மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunalபழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது,  இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பழனி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சிறுமையை அழைத்துச் சென்றுள்ளனர். 

இதையடுத்து சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஆறுமாதம்  கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பழனி  ஆட்சியர் அருண் ராஜுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.  ஆட்சியர், விரைவில் காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமியின் தாய் மாரியம்மாளின் இரண்டாவது கணவன் காமராஜன் தான் இந்த இரக்கமற்ற செயலுக்கு காரணம் என்பது தெரியவந்தது. 

மகள் என்று கூட பாராமல் நீண்ட நாட்களாக அவன் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான் எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், அந்தக் கொடூரனை போக்சோ சட்டத்தில் கைது சிறையில் அடைத்துள்ளனர். 

English Summary

husband raped daughter


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal