வரதட்சணை கேட்டு தினம் இளம்பெண் சித்திரவதை., கணவன் கைது..!! 
                                    
                                    
                                   Husband arrested for abusing young woman for dowry
 
                                 
                               
                                
                                      
                                             வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், லால்குடியில் வசித்து வருபவர் பாரத். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சாவித்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், பாரத் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தினமும் சித்திரவதை செய்து வந்துள்ளார்.அதுமட்டுமின்றி, அவருடன் சேர்ந்து பாரதின் பெற்றோரும் அவரை தொல்லை செய்துள்ளனர்.

சம்பவதன்று, அந்த பெண்ணை வரதட்சணை வாங்கிவர சொல்லி கட்டையால் அடித்துள்ளனர். இதற்கு மேல் கொடுமையை தாங்க முடியாது  என முடிவெடுத்த அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பாரத் ஐ கைது செய்தனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Husband arrested for abusing young woman for dowry