விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவிட்ட மனித உரிமைகள் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 18-ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில், பத்து பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். 

இந்த நிலையில் உயிரிழந்தோர் சிகிச்சைக்கான நிவாரண உதவித் தொகையாக குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

இதேபோல் பிரதமர் மோடியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார். 

 

இந்த நிலையில், உயிரிழந்த பத்து பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண நிதியை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் வழங்கினர். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், இந்த விபத்து குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

human rights commission order to district collector for report submit viruthunagar firecracker fire issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->