சென்னையில் பயங்கரம்! கணவரின் மண்டையை 'நொறுக்கிய' மனைவி...! ரத்த வெள்ளத்தில் அலறிய கணவன்..! -அதிரடி கைது
Horror Chennai Wife crushed husband skull Husband screamed blood Arrested action
நேபாளத்தைச் சேர்ந்த தம்பரு அஸ்ரிகா (50) மற்றும் அவரது மனைவி மாயா (41) ஆகியோர், கடந்த நான்கு மாதங்களாக சென்னை அம்பத்தூர் மங்களபுரம் பகுதியில் வாடகை இல்லத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, இருவரும் ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென தீவிரமடைந்து கைகலப்பாக மாறியது. அதில் கோபம் அடைந்த தம்பரு அஸ்ரிகா, தனது மனைவி மாயாவின் பொருட்களை தீயிட்டு எரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதைக் கண்ட மாயா ஆத்திரம் அடைந்து, அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து தனது கணவரின் தலையில் பலத்ததாக அடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் தலையில் கடுமையான காயம் அடைந்த தம்பரு அஸ்ரிகா, ரத்தத்தில் சுருண்டு விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவலர்கள், மாயா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Horror Chennai Wife crushed husband skull Husband screamed blood Arrested action