அறியாவயசு! மின் கம்பத்திலிருந்த குருவிக்கூட்டை காப்பாற்ற முயன்ற சிறுவனின் கோர சம்பவம்...!
horrific incident boy trying save sparrows nest from electric pole
நாமக்கலில் பரமத்தி செல்லப்பம்பாளை பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ரகுநாதன் என்பவரது 9 வயது மகன் சஞ்சய். இந்த சிறுவன் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவன் இன்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான்.

அச்சமயம் அருகில் இருந்த மின்கம்பத்தில் குருவி கூடு ஒன்று கட்டியிருந்தது. அந்த சிறுவன் அங்கிருந்த கூட்டை எடுக்க மின்கம்பத்தில் ஏறியுள்ளான்.இதில் திடுக்கிடும் தகவலாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் பரமத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சஞ்சய் ஏற்கனவே உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தகவலறிந்த காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், குருவிக்கூட்டை எடுக்க சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
horrific incident boy trying save sparrows nest from electric pole