அதிக கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது பாய்ந்தது வழக்கு..உயர் நீதிமன்றம் அதிரடி..! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலை காரணமாக தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தையும் பெற்றோர்களிடமிருந்து கேட்கக்கூடாது என்றும் அதிகபட்சமாக 40 சதவீதம் கட்டணங்களை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கையும் மீறி தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர்கள் இந்த புகார்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இன்று விசாரணை நடத்தியது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அதிக கல்வி கட்டணத்தை வசூலித்து 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 9 பள்ளிகளும் அக்டோபர் 14ம் தேதி பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு கல்வி கட்டணம் வசூலிப்பதாக வந்த 111 புகாரில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை என அதிக கல்வி கட்டணத்தை வசூலித்து 9 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எந்த உறுதி அளித்தனர். 

மேலும், பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை  இனியும் நீட்டிக்க போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதற்கிடையே, சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் முழு கட்டணங்களை கேட்டால் உடனடியாக feescomplaintcell@gmail.com என்ற இ-மெயில் மூலமாக புகார் அளிக்கலாம். புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court filed case for nine schools


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->