வெளுத்து வாங்கும் கனமழை.! சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தில் எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கும் மேல் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உதவி எண்கள்: 1913, 044-25619206, 044-25619207, 044-25619208 இந்த எண்களில் புகார் அளிக்கலாம். மேலும் மாநகராட்சியின் நம்ம சென்னை செயலி அல்லது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வழியாகவும் பொதுமக்கள் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

helpline numbers alert of Chennai Corporation due to heavy rain


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->