கனமழை எதிரொலி: சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடல்! - Seithipunal
Seithipunal


சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீர் அமைக்கப்பட்ட நிலையில் 11 சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன. 

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. 

நேற்று காலை முதல் பல்வேறு முக்கிய சாலைகளில் தேங்கி இருந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. 

சென்னை தாம்பரத்தில் இருந்து அண்ணா சாலை வரையும் கிழக்கு கடற்கரை சாலையிலும் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. 

மேலும் கணேசபுரம், வில்லிவாக்கம், ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை, சூளைமேடு, கதிர்வேடு போன்ற சுரங்க பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain 11 tunnels closed in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->