செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்த நீக்க கோரிய வழக்கு - இன்று விசாரணை.!! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்த நீக்க கோரிய வழக்கு - இன்று விசாரணை.!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரில் வானதிராயன்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்து இருந்ததாவது:- 

கடந்த 2021-ம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்று மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. 

அதன் படி,அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். அதன் பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அதன் பின்னர் அவரிடம் இருந்த மின்சாரம், கலால் துறைகள் பறிக்கப்பட்டு மற்ற இரண்டு அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டது. 

தற்போது அவர் எந்தத் துறைகளும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஆகவே அவரை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மதுரை நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hearing of senthil balaji minister posting remove case in madurai high court


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->