தமிழகத்தில் 52.9 சதவீதம் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 52.9 சதவீதம் பெண்களுக்கு ரத்த சோகை பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி.!!

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:- நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 106 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில், வளர் இளம் பருவத்தினர் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, சைதாப்பேட்டையில் 500 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முகாமில் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினருக்கு சுகாதார ஆலோசனைகள், விழிப்புணர்வு மற்றும் ரத்த சோகைக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு பரிசோதனைகளும் செய்யப்படும்.

தமிழகத்தில் ரத்தசோகை பாதிப்பை பொறுத்தவரை வளர் இளம் பெண்களுக்கு 52.9 சதவீதம், ஆண்களுக்கு 24.6 சதவீதம் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், ரத்தசோகை பாதிக்கப்பட்ட வளர் இளம் பருவத்தினர்களை கண்டறிந்து 20 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன் ரத்தசோகை இல்லா தமிழகமாக மாற்றுவதே இந்த சிறப்பு முகாமின் நோக்கமாகும். 

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வளர் இளம் பருவத்தினருக்கான மருத்துவ முகாம்களின் கீழ் கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்னிலையில் மருத்துவர்களின் அறிவுரையின்படி எடுத்துக்கொள்ள வேண்டும். 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊட்டியில் இரும்பு சத்து மாத்திரைகளை அதிக அளவில் ஒரு மாணவி எடுத்துக்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அதனால், மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி மாத்திரைகளை கவனமாக உட்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health minister m subramaniyam press meet in chennai cythapet


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->