உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் இளைஞர்களிடம் உத்வேகம் ஏற்பட்டுள்ளது - அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு.!
Health department minister subramaniyan speach
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளைக் கொடாடி வருகிறார்.
இதனை முன்னிட்டு அவருக்கு அதிகாலையில் இருந்தே அரசியல் வட்டாரங்கள், சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை விருகம்பாக்கத்தில், தமிழக மக்கள் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, "தி.மு.க.வுக்கு 19 மற்றும் 20 துணை அமைப்புகள் இருந்தபோதும் கூட, தி.மு.க. இளைஞரணி முப்பது லட்சம் இளைஞர்களை கொண்டு உயிரோட்டத்துடன் இருந்தது.
இந்த இளைஞரணி பொறுப்பை இரண்டாவது முறையாக ஏற்றுகொண்ட உதயநிதி ஸ்டாலின் திறம்பட செயலாற்றி கொண்டு வருகிறார். அவர் பொறுப்பேற்றதிலிருந்து, இளைஞர்களிடம் ஒரு நல்ல உத்வேகம் மற்றும் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதனால், தி.மு.க.வில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து வருகின்றனர்" என்று அவர் பேசியுள்ளார்.
English Summary
Health department minister subramaniyan speach