மாமனார் கொடுத்த தொல்லை... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


மாமனார் அளித்த பாலியல் தொல்லையால்  மனமுடைந்த மருமகள் தீ வைத்துக்கொண்டார்.இதையடுத்து இளம்பெண்ணின் மாமனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். 32 வயது ஆன அந்த பெண்  தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருடன் அதே பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் 65 வயதான பெண்ணின்  மாமனார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மருமகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.உடனடியாக தந்தையிடம் இது குறித்து கேட்பேன் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். 
இந்தநிலையில் இதை அறிந்த மாமனார் வெளியூருக்கு தப்பி சென்றுவிட்டார் .இதனால் மனவருத்தம் அடைந்த இளம்பெண் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 

அவரை குடும்பத்தினர், காப்பாற்ற முயன்றபோதிலும்  அவர் உடல் கருகி பலத்த காயம் அடைந்தார்.அதனை தொடர்ந்து அவரை  மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தீவிர  சிகிச்சையில் இருந்த அந்த பெண் சிகிச்சை  பலனின்றி  பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் மாமனாரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தாயை இழந்து 2 குழந்தைகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக அந்த இளம்பெண்  மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனக்கு மாமனார் அளித்த பாலியல் தொல்லை குறித்து போலீசாரிடம் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Harassment from my father-in-law A young girl's fateful decision


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->