ரெயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்...! - கோடைக்கால நெரிசலை குறைக்கும் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


கோடைகாலத்தில் அதிகரிக்கும் பயணிகள் நெரிசலை குறைக்கும் நோக்கில் தென்மேற்கு ரெயில்வே புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மற்றும் எஸ்.எம்.வி.டி. பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 06007 கொண்ட திருச்சி-பெங்களூரு சிறப்பு ரெயில், வரும் 7, 14, 21, 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

அதேபோல், வண்டி எண் 06008 கொண்ட பெங்களூரு-திருச்சி சிறப்பு ரெயில், அதே நாட்களில் மதியம் 3 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு திருச்சியை அடையும்.

இந்த ரெயில்கள் இரு வழித்தடங்களிலும் கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கே.ஆர்.புரம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நிறுத்தம் பெறும்.

பயணிகளின் வசதிக்காக 2 ஏசி சேர் கார், 8 இரண்டாம் வகுப்பு சேர் கார், 6 அந்தியோதயா பெட்டிகள் உள்ளிட்ட மொத்தம் 18 பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த ஏற்பாடு மூலம் கோடை பயணத்தை சுலபமாக்கும் வகையில் ரெயில்வே துறை முன்னெடுத்துள்ள நடவடிக்கை பயணிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Happy news train passenger Special trains announced reduce summer congestion


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->