சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர் திருமாவளவன் மற்றும் கி.வீரமணியையும் கடுமையாக விமர்சித்த பிரபலம்.! - Seithipunal
Seithipunal


துக்ளக பத்திரிக்கையின் 50 வது ஆண்டு விழாவில் அந்த பத்திரிக்கையின் பெருமைகளை பற்றி நடிகர் ரஜினி மேடையில் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சி திமுகவின் ஆதரவோடு மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.

அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர், சீதை, சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து, இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தியதை ரஜினி சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி பெரியாரை இழிவு படுத்தியதாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திராவிட கழகம், திமுக, திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தரப்பு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த எதிர்ப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினி பேசினார்,  நான் உண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது. இல்லாததை ஒன்றும் நான் சொல்லவில்லை என கூறினார். 

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர் திருமாவளவனும், சமீபத்தில் கிருஷ்ண பரமாத்மாவையும் பகவத்கீதையையும் இழிவாகப் பேசி திருச்சியில் எதிர்வினையை நேரில் சந்தித்த கி.வீரமணியும் பண்பாடு நாகரிகம் குறித்து பேசுவது விநோதமாக உள்ளது. இதுதான் சாத்தான் வேதம் ஓதுவது என்பதோ என்று பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், சேலத்தில் ஹிந்து கடவுளை ஈவெரா அவமதித்ததை கண்டித்து ஆத்திக சங்கத்தை சேர்ந்த திரு.சின்ன அண்ணாமலை அவர்கள் ஒரு சுவரொட்டி அச்சிட்டார் அதை தமிழக அரசு தடை செய்து அந்த போஸ்டர்களை கைப்பற்றியது. ஆனால் திரு.சின்ன அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் அந்த சுவரொட்டியில் ராமனையும் முருகனையும் ஈவெரா வலது கையில் செருப்பை வைத்துக்கொண்டு அடிப்பதுபோலும் இடது கையில் மாற்றான் மனைவியை பெண்டாட சட்டத்தில் அனுமதி வேண்டும் என்று எழுதிய நோட்டீசும் போட்டு அச்சடிக்கப்பட்டது. 24-02-1971 ஆணையின் படி சென்னை உயர்நீதிமன்றம் அரசு கைப்பற்றிய போஸ்டர்களை அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் இதில் எந்த சட்ட மீறலும் இல்லை என்று உத்தரவிட்டது என பதிவு செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja tweet about thirumavalavan and k veeramanai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->