#Breaking | வழிகாட்டி பலகை சரிந்து விழுந்த விவகாரம்.. மேலும் 6 பேருக்கு ஏற்ப்பட்ட துயரம்.! பேருந்து ஊழியர்கள் அதிரடி செயல்.! - Seithipunal
Seithipunal


சென்னை ஆலந்தூர் மெட்ரோ பகுதிக்கு அருகில் சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.

சென்னை ஆலந்தூர் பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ அருகே சாலை வழிகாட்டி பலகை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இதில் மாநகர பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது

 இதனால் சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டி பலகை சரிந்து விழுந்து ஒரு நபர் பலியாகியுள்ளார். இந்த பலகையின் மீது மாநகரப் பேருந்து இடித்ததால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது பலகை சரிந்து விழுந்துள்ளது. அப்போது அருகில் நின்ற நபர் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது வழிகாட்டி பலகை விழுந்ததில், 5 பேர் படு காயமடைந்திருப்பதாகவும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இதில், சம்மந்தப்பட்ட மாநாகர பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போலிஸில் சரணடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Guindy accident issue update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->