மழைக்காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தல்! - Seithipunal
Seithipunal


மழைக்காலங்களில் மின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள் , மின் பகிர்வு பெட்டிகள் அருகில் செல்லாமல் , மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அதை தொடாமலும் அருகில் செல்லாமலும்  இருப்பதோடு உடமையாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்கவேண்டும் மின் பாதைக்கு அருகில் உள்ள மற்றும் கிளைகளை மின் ஊழியர் துணையோடு மட்டுமே வெட்ட வேண்டும். 

மின்மாற்றிகள் மற்றும் மின் பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில் குழந்தைகளை விளையாட விடக் கூடாது. கு கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடக்கூடாது டிரான்ஸ்பார்மர்கள் மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது.

மின் கம்பத்தின் அருகில் உள்ள இழுவைகம்பியிலோ, மின் கம்பத்திலோட கயிறுகட்டி துணிகளை உலர்த்த கூடாது. அவற்றில் கால்நடைகளை கட்டக்கூடாது. இடி, மின்னலின் போது மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள். துணை மின் நிலையங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடையக்கூடாது. நுகர்வோர்கள் தன்னிசையாக மின் மாற்றங்களில் எரியிழைணை மாற்றக்கூடாது. 

இடி. மின்னலின் போது டி.வி. மிக்சி, கிரைண்டர். கணினி போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்க வேண்டும். மேலும் வீட்டினில் எர்த்தினை முறையாக பராமரிக்க வேண்டும். வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால். உடனடியாக உலர்ந்த ரப்பர் காலணியே அணிந்து, மெயின் சுவிட்ச்சை நிறுத்த வேண்டும் மெயின் சுவிட்ச்சை நிறுத்தாமல் வீட்டினுள் மின் பழுது பார்க்க கூடாது.

பவர் பிளக்கினில் கைவிரல், குச்சி, கம்பு போன்றவற்றை நுழைக்கக் கூடாது. சுவிட்சை நிறுத்திய பிறகே மின் விசிறி, அயன்பாக்ஸ், வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை இணைக்கவோ, துண்டிக்கவோ வேண்டும். செல் போன்கள் சார்ஜில் இருக்கும் போது பயன்படுத்த வேண்டாம். மழைக்காலத்தில் பொதுமக்கள் மின் விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் மேற்கூறிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து மின் பாதிப்பு ஏற்படாமல் அதிக எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுகொள்ளப்படுகிறது. மின்சாரம் குறித்து அனைத்து புகார்களையும் 24X7 முழு நேரமும் இயங்கும் மின்னகம் 9498794987 என்ற புகார் மையத்திற்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Guidelines to follow during the rainy season District Collector Prathaps advisory to the public


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->