குரூப் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது...! -தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம்
Group 2 exam results released on website Tamil Nadu Public Service Commission
குரூப் 2 பிரிவின் கீழ், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர் ஆகிய பதவியிடங்கள் வருகின்றன.

இதேபோல் குரூப் 2-ஏ பிரிவின் கீழ், கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கையில் உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளர், அமைச்சுப் பணியாளர்களில் உதவியாளர்கள், இளநிலை கணக்காளர் போன்ற பணியிடங்கள் வருகின்றன.
அவ்வகையில், குரூப் 2 பிரிவில் 534 காலியிடங்களுக்கும், 2-ஏ பிரிவில் 2,006 இடங்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 5,80,000 பேர் எழுதினர். இதைத்தொடர்ந்து, முதன்மைத் தேர்வு முதல்தாள் தேர்வு கடந்த பிப். 8-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து 13வது முறையாக அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் , 'தேர்வு முடிவுகள் 53 வேலை நாட்களில் தேர்வாணையத்தில் விரைவாக வெளியிட்டுள்ளன' எனத் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் www.tnpsc.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
English Summary
Group 2 exam results released on website Tamil Nadu Public Service Commission