கோயம்பேட்டில் பரபரப்பு - மாநகர பேருந்து ஓட்டுனரை வெளுத்து வாங்கிய சக ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள கொரட்டூரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மாநகர பேருந்து தடம் எண் 70 கோயம்பேடு பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இந்தப் பேருந்தை சிவானந்தம் ஓட்டினார். இந்த நிலையில் ஓட்டுநர் சிவானந்தம் பேருந்து நிலையத்துக்குள் பயணிகள் இறக்கி விட்டுவிட்டு, முன்னால் நின்ற மற்றொரு மாநகர பேருந்தை வழிவிடுமாறு தெரிவித்தார்.

ஆனால் அந்த மாநகர பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை எடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவானந்தம், எதுவாக இருந்தாலும் பேருந்துக்குள் வந்து பேசும்படி தெரிவித்தார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்துக்குள் ஏறியவுடன் சிவானந்தம் பேருந்தின் தானியங்கி கதவை மூடிவிட்டு அங்கிருந்து பேருந்தை எடுத்தார். 

இதனால், அதிர்ச்சி அடைந்த மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் பேருந்தை நிறுத்தும்படி தெரிவித்தனர். ஆனால் சிவானந்தம் கேட்காமல் தொடர்ந்து பேருந்தை இயக்கினார். இதனால் ஓட்டுனர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. 

இதனால், மேலும் கோபமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் சேர்ந்து ஓட்டுநர் சிவானந்தத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். பேருந்துக்குள் பயணிகள் கண் முன்பே ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மாநகர பேருந்து ஓட்டுனரை மற்றொரு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சேர்ந்து தாக்குவதை அந்த பேருந்தின் நடத்துனர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus drivers and conductors fight in chennai koyambed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->