சென்னை மக்களுக்கு ஓர் நற்செய்தி..! முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


கடந்து வந்த கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது. அதில் முக்கிய இடம் தலைநகரான சென்னை தான். பல ஐடி கம்பெனியில் வேலை செய்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியது தண்ணீர் பஞ்சம்.

ஏரிகள் வறண்டு, பொதுமக்கள் குடிநீருக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டது. பலரும் அன்றாட தேவைக்காக தண்ணீர் இல்லை என்று கூறி சென்னையை காலி செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மண்டல வாரியாக உயர்ந்துள்ள நீரின் அளவினை குடிநீர் வழங்கல் வாரியம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதன்படி தேனாம்பேட்டையில் செப்டம்பரில் 4.92 மீட்டராக இருந்த நிலத்தடி நீர், அக்டோபர் முடிவில் 1.76 ஆக அதிகரித்து 5.98 மீட்டரில் இருக்கின்றது.

இது போலவே அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், திருவிக நகர் மற்றும் ஆலந்தூர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பெருங்குடி மற்றும் அடையார் நீர்மட்டம் உயர்ந்து இருப்பதை புள்ளி விபரங்களுடன் குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

good news for chennai people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->