பேரறிவாளன் விடுதலையில் தமிழக காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு! ஜி.கே.வாசன் கருத்து.! - Seithipunal
Seithipunal


பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரட்டை வேடம் போடுவதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பேரறிவாளனின் விடுதலை சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல்வேறு காரணங்களைக் கொண்டு சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரும் நிரபராதிகள் இல்லை என்பது ஏற்கனவே நடந்த விசாரணையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் தீர்ப்பும் அமைந்துள்ளது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்தில் அவனுடன் சேர்த்து 17 பேர்கள் குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளும், காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை மனநிலையை தமிழகத்தை ஆளும், ஆட்சியும், கட்சியும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும் காரணம் சிறையில் உள்ள மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளும் திமுக கூட்டணி கட்சிகளும் சங்கத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாரதப் பிரதமரின் கொடூர கொலையில் ஈடுபட்ட பேரறிவாளன் விடுதலை உறுதியான உணர்வு பூர்வமான நிலையை எடுக்காமல் ஒருபுறம் ஒப்புக்கு போராட்டம் என்றும், மறுபுறம் பேரறிவாளன் விடுதலை பாராட்டும், கொண்டாடும் கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது அவர்கள் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து காட்டுகிறது.

 மேலும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த உணர்வுபூர்வமான பிரச்சனையில் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது பதவி நலனுக்காகவா? அல்லது சுய நலனுக்காகவா? அல்லது கூட்டணி நலனுக்காகவா? என்று தெரியவில்லை. உண்மையிலேயே ராஜீவ் காந்தியின் கொலை சம்பவத்தையும் மறக்கவோ, மன்னிக்கவோ, முடியாத நிலையில் இருப்பது உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVasan statement on the release of Perarivalan


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->